தூத்துக்குடி மாநகராட்சி பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதற்காக மாநகராட்சியின் 15வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் புதிதாக ஜேசிபி வாகனம் இன்று வாங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை சாலையில் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மணல் குவியல்கள் மற்றும் புதர் செடிகளை அகற்றும் பணியானது இன்று நடைபெற்றது
நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டது.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சாரு ஸ்ரீ, துணை மேயர் ஜெனீட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.