சேலம் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க வீட்டு வரி உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அவைத் தலைவருமான பன்னீர்செல்வம்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் ஜெயபிரகாஷ் கவுன்சிலர் யாதவமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் ரவி,மோகன்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.