பாம்பன் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள்.!!

 

பாம்பன் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்டவைகள் மூலம் சீலா, மாவுலா, இறால், பாறை, நண்டு, கிளி, முரல் உள்ளிட்ட மீன்களை பிடித்தாலும் அதில் அதிக விலை கொண்டது சிங்கி இறால் மீன்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த மீன்கள் அதிகம் பிடிபடும்.

இந்நிலையில், ராமேசுவரம் பகுதி மீனவர் வலையில் அதிக கிராக்கி கொண்ட மணி சிங்கி இறால் பிடிபட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வியாபாரிகள் மூலம் கேரளாவில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, விமானம் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.

இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது: மணி சிங்கி இறால் உயிருடன் இருந்தால் கிலோ ரூ.4000 முதல் ரூ. 5000 வரை விலை போகும்.

அதே மீன் இறந்து போனால் கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 400-க்கு மட்டுமே விலை போகும். வெளிநாடுகளில் சிங்கி இறால்களை விரும்பி உட்கொள்வர். சிங்கி இறால்களில் கிளிசிங்கி, மணி சிங்கி என 2 வகைகள் உள்ளன. இதில் மணி சிங்கி பெரும்பாலும் மீனவர்கள் வலைகளில் கிடைத்தாலும், கிளிசிங்கி கிடைப்பது அரிதானது என்றனர்.

#பாம்பன் #lobster

Ahamed

Senior Journalist

Previous Post Next Post