உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் கூட்டு துப்புரவு பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகர நல அலுவலர் அருண்குமார், ஆலய பங்கு தந்தை குமார் ராஜா, மாமன்ற உறுப்பினர் ரிக்டா, சுகாதார அலுவலர், பொது சுகாதாரப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.