தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜகவினர் அறப்போராட்டம்.!


தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், ‘குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிம தொகை வழங்கப்படும்; சமையல் காஸ் சிலிண்டருக்கு, ரூபாய் 100 மானியம் தரப் படும்' என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

அக்கட்சி ஆட்சியை பிடித்து  ஓராண்டிற்கு மேலாகியும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மாவட்டங்களின் தலைநகரங்களில் உண்ணாவிர போராட்டம் நடத்துகின்றனர்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாபெரும் அறப்போராட்டம்  நடைபெற்றது.


போராட்டத்தில் நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜா, சிவமுருகஆதித்தன், உமரி,சத்தியசீலன், மாவட்டதுனைதலைவர்கள் சிவராமன்,செல்வராஜ், சுவைதார் வாரியார், தங்கம், சரஸ்வதி, பல்க் ரேவதி, பெருமாள், 

மாவட்ட செயலாலர்கள் வீரமணி, கனல்ஆறுமுகம், சங்கர் பாப்பா ராமகனி,  அர்ஜுன்பாலாஜி,  ராஜபுணிதா, ஆண்டாள், மண்டல தலைவர்கள் வினோத், ராஜேஷ்கனி,மாதவன் சிவகணேஷ், நம்பிதுரை அழகேசன், முத்துகுட்டி, குமரேசன், நவமணிகண்டன், முருகேசபாண்டியன், ஆறுமுகசெல்வன், ராஜகோபால், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post