கீழஅலங்காரதட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!*


தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட கீழ அலங்கார தட்டுப்பகுதியில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்  திறப்பு விழா இன்று நடைபெற்றது 

விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்னர் ஆரம்ப சோதனை நிலத்தை பார்வையிட்டு அங்கு பதியப்பட்டுள்ளகல்வெட்டு மற்றும் மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.


விழாவில் வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகராட்சி நகர் நல அலுவலர் அருண்குமார், உதவி பொறியாளர் பிரின்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,  மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசிலி, அந்தோணி பிரகாஷ் மார்சலின் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post