தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் திட்டம்.
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்கள் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
காலிப்பணியிடங்களின் விவரங்கள் குறித்து அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 6-ம் தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற ஆணை அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை