தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்து புத்தாக்க பயிற்சி.!



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் வைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் நீதித்துறை அகாடமியின் கௌரவ விரிவுரையாளர்  சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் தெளிவாக எடுத்துரைத்து விரிவுரையாற்றினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ்பாபு, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post