ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - விக்கிரமராஜா அறிவிப்பு.!

 

சென்னை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில வேளாண் விளைப் பொருட்களுக்கான செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் தழுவிய வணிகர்களின் இந்த கட்டண ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வை நீர்த்து போக செய்கின்ற செயலை ஒருசிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொருத்தவரையில் மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வை வெளிப்படுத்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post