தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட 44வது செஸ் ஓலிம்பியாட்ட போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான சதுரங்கம் பிரம்மிக்கதக்க வகையிலான சின்னம் செல்பி பாயிண்ட், ராட்சத பலூன் உள்ளிடவைகளை பொதுமக்கள் பார்வைக்கு
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்கள் வாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் செந்தில்ராஜ், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்து பலூன்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், ராமசந்திரன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார்,
மாநில மீணவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர திமுக பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி,
கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், எடின்டா, மெட்டில்டா, ஜெயசீலி, ரெக்ஸின், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின்,
மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மீனவரணி அமைப்பாளர் டேனி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மற்றும் அல்பட், பிரபாகர், லிங்கராஜா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.