இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் தனுஷ்கோடி 7ம் தீடையில் தஞ்சம் போலீஸ் விசாரணை


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக இலங்கை வாழ் தமிழ் மக்கள் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு கடல் மார்க்கமாக  அகதிகளாக வர துவங்கியுள்ளனர்

இன்று தனுஷ்கோடி அடுத்த ஏழாம் தீடைப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நான்கு அகதிகள்  வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது மீனவர்களின் உதவியுடன் படகு மூலமாக ஏழாம் திடையிலிருந்து நான்கு பேரும் தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு மெரைன் போலீசாரால் அழைத்து வரப்பட்டு போலீஸார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் 

விசாரணையில் இவர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல்மார்க்கமாக படகு மூலம் தனுஷ்கோடி ஏழாம் திடை பகுதிக்கு வந்து இறங்கியதாக போலீசாரணையில் தெரிவித்துள்ளனர் 

ஏற்கனவே 92 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 96 பேர் இதுவரை  அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post