தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் நேற்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெரு ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,
அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்களான கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (25), முகமூத் முகமது மகன் மேத்தாபிள்ளை மரைக்காயர் (25) மற்றும் மைதீன் அப்துல் காதர் மகன் ஜமால் (25) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரிகளான பிரபு வினோத்குமார், மேத்தாபிள்ளை மரைக்காயர் ஜமால் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட பிரபு வினோத்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், எதிரி மேத்தாபிள்ளை மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.