கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் திருவள்ளுவர் எஸ்.பி கல்யாண்
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் +2 மாணவி (17) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும்,
அது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவலை அளிக்கவில்லை எனக் கூறியும், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கீழச்சேரி பள்ளிக்கு புறப்பட்டார்
#anbilmahesh | #Thiruvallur