தூத்துக்குடியில் சூறைக் காற்றில் பனை மரம் விழுந்து 1வயது பெண் குழந்தை பலியானதையடுத்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி, கேவிகே நகர் பகுதியை சேர்ந்த தம்பதியர் இசக்கி (35),மனைவி பாலா ஆகியோரின் ஒரு வயது பெண் குழந்தை பவானி. இன்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள பனை மரம் பயங்கர வேகத்துடன் வீசிய சூறைக் காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் விழுந்ததில் பெண் குழந்தையின் தலை சிதறி இறந்துதுள்ளது. அருகிலிருந்த குழந்தையின் அத்தை படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில் அனுமதிக்கபட்டார்.
தகவலறிந்து வந்த மத்திய பாகம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இக்குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பரிதாபமாக இறந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் கீதா ஜீவன் குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.