துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 91 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது.
துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்களில் என உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் அதில் அடங்கும்.
இன்று முதல் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 22ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு நடைபெறும். மேலும் இத்தேர்வுக்கான கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.