முஹம்மது நபி குறித்து வெறுப்பு பேச்சு பேசிய நூபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகிய இரு செய்தித் தொடர்பாளர்களை பாஜக இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து டைம்ஸ் நவ்வின் நவிகா குமாரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது . டைம்ஸ் நவ்வில் நவிகா வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஷர்மா நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
ஷர்மா நபிகள் நாயகத்தை அவமதித்தபோது, நவிகாவின் குறுக்கீடு இல்லாததைக் கண்டு தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நவிகா பின்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி டெல்லி காவல்துறையை அணுகினார்.
நவிகா மீது நடவடிக்கை எடுக்குமாறு டைம்ஸ் நவ் சேனலின் உரிமையாளரான வினீத் ஜெயினை ட்விட்டர் பயனர்கள் பலரும் டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.