தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு சிஐடியு சார்பில் போராட்டம்.!


தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு NTPL அனல் மின் நிலைய கிளை (சிஐடியு) சார்பில் NTPL அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் இன்றில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகள்

30.4.2021 அன்று துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் வழங்கிய தீர்ப்பின் மீது மேல்முறையீடு என்கிற பெயரில் காலதாமதம் செய்து தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே, 

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியருக்கு என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்தை கொடுத்திட‌ வேண்டும், 

ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு சேர்க்க பணம் பெறும் (HR) அதிகாரி மீது சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும், 

கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும், 

தொழிற் தாவா வழக்குகளில் லஞ்சம் பெற்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக மனு தயாரித்துக் கொடுப்பது முதல் வாதாடுவது வரை தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் HR அதிகாரிகள் மீது துறை ரீதியான‌ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், 

தொழிற் தாவா நிலுவையில் உள்ள ENERCO நிறுவன‌ இறுதி பில் தொகையை நிறுத்தம் செய்ய வேண்டும், 


தொழிலாளர்களை பதவி இறக்கம் செய்து, கட்டாய விடுப்பு கொடுத்து தொழிலாளி ஊதியத்தில் மஸ்டர் ரோல் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 

ஒப்பந்த தொழிலாளி ஆறு நாட்கள் பணிபுரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும், 

தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்காமல் பல ஆண்டுகள் சட்ட விதிமீறல் செய்த நிறுவனங்கள், 

துணை நின்ற (HR) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், முறையாக இபிஎஃப் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், 

இன்ஜினியர், சூப்பர்வைசர் க்கு (EPF) செலுத்த வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், 

பிரதி மாதம் 1ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும் இறுதி வரை ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிறுவனங்களை கருப்பு பெட்டியில் வைக்க வேண்டும், 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவறை, பெண்களுக்கு பணிஇடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும், 

பணியிடத்தில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 

நிறைவேற்றிதராத பில் நிர்வாகத்தை கண்டித்தும் மின் ஊழியர் மத்திய அமைப்பு அனல் மின் நிலையம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் NTPL அனல்மின் நிலைய செயலாளர் அப்பாத்துரை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, 

தூத்துக்குடி மின் திட்ட செயலாளர் குண்ணிமலையான்,  TTPS செயலாளர் கணபதி சுரேஷ், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மாரியப்பன், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், 

உள்ளாட்சி ஊழியர் சங்கம் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்க செயலாளர் சங்கரன்,  உதவித் தலைவர் பொன்ராஜ்,  சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வையணப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post