“பேய காணோம்” டிரெய்லர் வெளியீட்டு விழா
மீரா மிதுன் முதல்வர் கனவை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு.
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் " பேய காணோம் ". தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள் தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல் கூறியதாவது…
இயக்குநரை பல காலமாக தெரியும் அவரின் திறமையை கண்டு நீங்கள் படம் செய்யலாமே எனக் கேட்டேன் நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும் என்றார். நானே தயாரிக்கிறேன் எனக்கூறினேன் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது.
இயக்குநர் செல்வ அன்பரசன் இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். ஆனால் அவர் பற்றி பொதுவில் நல்ல அபிப்ராயங்கள் இல்லை அதனால் வேண்டாம் என்றேன் ஆனால் இயக்குநர் அவர் பொருத்தமாக இருப்பார் படத்திற்கு பலமாக இருக்கும் என்றார் நானும் சரி என்றேன்.
ஆனால் அவர் வந்த போதிலிருந்தே பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். இயக்குநர் மீதே குற்றசாட்டு கூறினார். ஷீட்டிங்கில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன் விமான டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்பார். அவர் நிறைய தொல்லைகள் தந்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் முதல்வர் ஆவதை நான் தடுப்பதாக என் மீதும் குற்றம் சுமத்தினார். படம் பாதி எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை, அவரை போன்ற ஒருவரை வைத்து கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விசயம்.
இப்படத்திற்கு பல தடைகள் வந்தது அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம் அதற்காக தான் இந்த வெற்றி விழா. எங்கள் படம் நல்லதொரு காமெடி படமாக வந்துள்ளது. இப்போது திரையரங்குகளில் சிறு படங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.
விக்ரம் படத்திற்கும் என் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலை என்பது அநியாயம். 50 ரூபாய் டிக்கெட் வைத்தால் என் படத்திற்கும் கூட்டம் வரும். இதை தயாரிப்பாளர் சங்கங்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படத்தை கடினாமாக உழைத்து உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
இயக்குநர் செல்வ அன்பரசன் கூறியதாவது…
என்னிடம் நிறைய அருமையான கதைகள் இருந்தது ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்தேன். கடவுள் ஆசிர்வாதமாக தயாரிப்பாளர் R. சுருளிவேல் வாய்ப்பு தந்தார். முழு சுதந்திரம் தந்தார். நான் செய்த மிகப்பெரிய தவறும் மிகப்பெரிய சரியும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியது தான். அவர் பேயாக காட்ட மீரா மிதுன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன் ஆனால் அவருக கும் எனக்கும் வந்த முதல் நாளே சண்டை. அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சமாதானம் பேசி ஒழுங்காக ஷூட்டிங் வந்தார்.
நன்றாகவும் நடித்து கொடுத்தார். அதன் பிறகு ஒரு கேஸில் ஜெயிலுக்கு போய் விட்டார். அவர் வெளியே வந்த பிறகு எப்படியோ படத்தை எடுத்து முடித்து விட்டோம். மற்ற நடிகர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளை சந்தித்தது ஆனாலும் எங்களை சுற்றி சில நல்ல உள்ளங்கள் இருந்ததால் எங்களால் படத்தை முடிக்க முடிந்தது.
வடிவேலு பாணியில் இவ்வளவு அடியும் வாங்கிட்டு உசுரோட இருக்கனே எனக்கு தான் இந்த கப்பு என்பது போல இவ்வளவு பிரச்சினையும் தாண்டி இந்த படத்தை முடித்ததே பெரிய சக்சஸ். அதனால் தான் இந்த வெற்றி விழாவை வைத்தோம். இந்தப்படத்தில் நல்ல கதை இருக்கிறது. உங்கள் எல்லோரையும் இந்தப்படம் சிரிக்க வைக்கும். இந்தப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு
இசை - மிஸ்டர் கோளாறு
ஒளிப்பதிவு - ராஜ்.O.S,
கௌபாஸு, பிரகாஷ்
எடிட்டிங் - A.K.நாகராஜ்
தயாரிப்பு மேற்பார்வை - உசிலை சிவகுமார்.
மக்கள் தொடர்பு - மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செல்வ அன்பரசன்.
வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள்.
பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது.ப டத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில்..விரைவில் திரைக்கு வர இருக்கிறது.