தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கல்குவாரியில் லிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த மதன்குமார்( கூலி தொழிலாளி )மகள் வைஷ்ணவி(16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த ஷேக் முகமது.மெகர் ரோஜா மகள் ஜன்னத் அர்சியா (13) 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜன்னத் அர்சியாவின் சகோதரி ஷகிலா இருவரும் வைஷ்ணவி வீட்டிற்கு சென்றுள்ளனர் அப்போது வைஷ்ணவி மற்றும் ஜன்னத் அர்சியா ஆகிய இருவரும் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர்.
கல்குவாரியில் குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையான தீயணைப்பு வீரர்கள் 10 பேர் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இருவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற இரு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.