தூத்துக்குடி சண்முகபுரம், வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (43). இவர் பிரையண்ட் நகர் 7வது தெருவில் வீடு கட்டி வருகிறார். இன்று பிற்பகல் 12 மணியளவில் அந்த வீட்டில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். சுமார் 13 அடி ஆழம் தோண்டிய நிலையில் எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது.
அப்போது கிணற்றுக்குள் இருந்த தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 6வது தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் மாரிமுத்து (20), என்பவர் சகதி மணலில் சிக்கியதில் மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.