தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் புதிதாக சாலைகள் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் காலனி சாலை அமைக்கும் பணிகள் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
மேலும் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் கோமதி பாய் காலணியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்வில் துணை மேயர் ஜெனீட்டா, உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.