தூத்துக்குடி மாவட்ட நியாய விலைக்கடைகளில் அமைச்சர்கள் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் நியாய விலைக்கடைகளை  உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், 

மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது;


தூத்துக்குடி புதிய துறைமுகம் 2 நியாய விலைக்கடையில் அமைந்துள்ள சிறு பல்பொருள் சிறப்பு அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பார்வையிட்டு அவற்றின் தரத்தினை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்கள். 

மேலும் இங்கு விற்கப்படும் பொருட்கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


அதனைத்தொடர்ந்து மீளவிட்டான் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கியில் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் அத்யாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டதோடு அரிசியின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் இங்கிருந்து நியாய விலைக்கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்கும் கணக்குகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தவறுகள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் பி அண்ட் டி காலணியில் அமைந்துள்ள அமுதம் நியாய விலைக்கடை மற்றும் தூத்துக்குடி வேளாண்மை கூட்டுறவு சங்கம் நியாயவிலைக்கடையில் வைக்கப்பட்டுள்ள அத்யாவசிய பொருட்களை ஆய்வு செய்து 


அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டதோடு அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் நியாய விலைக்கடையில் வழங்கும் பொருட்களின் தரம், அளவுகள் குறித்து கேட்டறியப்பட்டது என  உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஆய்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, குடிமை வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமாரசுவாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, 

மாவட்ட ஆவின் பெருந்தலைவர் சுரேஷ், தூத்துக்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post