தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப்நந்தூரி ஆய்வு


தூத்துக்குடி முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் கடல்நீர் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவது தொடர்பான இடங்களை தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப்நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், ஆகியோர்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்

சுற்றுலா துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை இயக்குநர் முனைவர்.சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மைதானங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் தெரிவித்திருந்தார்கள். 

அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப்நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன் ஆகியோர்கள் முன்னிலையில் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு செயல்படுத்துவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட்பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.


Previous Post Next Post