தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு குறைகளை மனுக்களை அளித்தனர். இதனிடையே தூத்துக்குடி மீளவிட்டான், மடத்தூர். புதூர் பாண்டியபுரம். பண்டாரம்பட்டி. சில்வர்புரம், சங்கரபேரி,
வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி, சாமிநத்தம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இது கூறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியதாவது
"ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த நிறுவனத்தால் இங்க கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆலையை மீண்டும் திறக்கப்பட்டால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்பதனால் அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவ்வாறு கூறியிருந்தது