சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் பெருமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சன்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் 186 பயனாளிகளுக்கு 16,50,815 ரூபாய் மதிப்பிட்டில் இலவச வீட்டு மனை பட்டா 9 பயனாளிகள், விலையில்லா தேய்ப்பு எந்திரம் பெட்டி 5 பயனாளிகள், இலவச தையல் இயந்திரம்10 பயனாளிகள், உலமா நலவாரிய அட்டை 12பயனாளிகள், சீர்மரபினர் நல வாரியத்தை 10 பயனாளிகள்,
முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள் 140 பயனாளிகளுக்கு தலா ரூ.10000 விதம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான்,கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.