தூத்துக்குடி : குழாய் உடைந்து வீணாக ஓடும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் அருள்ராஜ் மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடைக் கால்வாயில் கலந்து சென்று கொண்டிருக்கிறது.  தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் இன்றி மக்கள் திண்டாடி வரும் வேளையில் குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக 30வது வட்டச் செயலாளர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post