26 ஜூன் 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று, வேலம்மாள் போதி அகாடமியின் பள்ளி விடுதியில் 17 வயது பிளஸ் டூ படிக்கும் பெண் உடல் நிலை எனக் கூறி ஸ்டான்லி மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
முதல் நாளான 25ம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் வேலம்மாள் போதி அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி அதிகாலை மாணவியின் பெற்றோருக்கு, அவருடைய மகள் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களின் மகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமையன்று மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் அளித்தும், வேலம்மாள் நிர்வாகம் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் விடுதியிலேயே சிகிச்சை அளித்ததாகவும் , இதனால் மாணவி மரணமடைந்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
பிரச்சினை தீவிரமாவதை உணர்ந்த வேலம்மாள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் பிரச்னையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டதையடுத்து, கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.