ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முரளீதரன், கலந்து கொண்டு மனுக்களை பெற்றார் .

ஆண்டிப்பட்டி,ஜூன் - 2


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளீதரன், தலைமை தாங்கினார். மாவட்ட பொது மேலாளர் ஜஸ்டின் சாந்தகுமார், மற்றும் தாசில்தார் திருமுருகன், முன்னிலை வகித்தனர்.

இந்த ஜமாபந்தி கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி  இன்றுடன் முடிவடைகிறது. ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 18 வருவாய் கிராமங்களுக்கு தினமும் 3 வருவாய் கிராமங்கள் என பிரித்து இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீட்டு மனை பட்டாக்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தனர். 

மேலும் தீர்வு பெற்ற மனுக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த ஜமாபந்தி நிகழ்வில் வருவாய் அலுவலர்கள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post