தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பில் நடமாடும் ஏ.டி.எம் இயந்திரம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நடமாடும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர கருவியினை திறப்பு விழா இன்று நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து திறந்து வைத்தார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வட்டாட்சியர் செல்வகுமார் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் அலுவலர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post