தூத்துக்குடி டேக்வாண்டோ வீரர் ராமலிங்க பாரதிக்கு பாராட்டு


தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையில் உதவி புரிந்து வருகிறது. இந்தியா டேக்வாண்;டோ சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நேஷ்னல் ரேங்க் கிங் டேக்வாண்டோ காம்படிசன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நடுவராக தூத்துக்குடியை சேர்ந்த ராமலிங்கபாரதி கலந்து கொண்டு பணியாற்றினார்.

அதில் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறந்த நடுவருக்கான விருதை இந்தியா டேக்வாண்டோ தலைவர் நாம்தேவ் உலக டேக்வாண்டோ சார்பான இந்தியா ஒருங்கிணைப்பாளர் கிராண்ட் மாஸ்டர் கிராஷ்பகாரி நடுவர் சேர்மன் மாஸ்டர் திருமால் ஜெயபால் டெக்னிக்கல் சேர்மன் மாஸ்டர் வினோத்குமார், சர்வதேச நடுவர் மாஸ்டர் பீட்டர் ஆகியோர் விருதினை வழங்கி பாராட்டினார்கள்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ராமலிங்கபாரதிக்கு தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்க நிர்வாகிகளும் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர். 

Previous Post Next Post