பொதுக்குழுவுக்கு வாருங்கள்,பிரச்னைகளை பேசித் தீர்க்கலாம் - ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் அழைப்பு.!

 

பொதுக்குழுவுக்கு கட்டாயம் வாருங்கள், பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என ஒபிஎஸ் க்கு இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் ஒன்றும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், திட்டமிட்டபடி பொதுக்குழு - செயற்குழு நடக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் இருவரும் பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post