"பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்..! , இரை தீர்ந்தால் பறந்துவிடும்" - பங்கம் செய்த செல்லூர் ராஜு

தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றில் தனித்தே போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக பாஜக – அதிமுக பிரமுகர்கள் இடையே யார் வலுவான எதிர்கட்சி என்ற வாக்குவாதங்கள் எழ தொடங்கியுள்ளது.

சமீப காலமாக தமிழ்நாடு பாஜக நடத்தும் கூட்டங்களில் திரளான மக்கள் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து பாஜக, அதிமுகவை முந்தி செல்வதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் எச்சரித்து பேசியிருந்தார்.

தற்போது பாஜக கூட்டங்களில் மக்கள் அதிகளவு கலந்து கொள்வது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவிற்கு கூடுவது கொள்கை கூட்டம். எங்கள் மீது துரும்பை கொண்டு வீசினால் நாங்கள் பதிலுக்கு தூணை கொண்டு எறிவோம்” என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post