தூத்துக்குடி மாவட்டம் - சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டுச்சான்றிதழ்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மிகவும் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையான ஸ்டெர்லைட் கலவரத்தின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2022 மற்றும் 23.05.2022 ஆகிய நாட்களில் திட்ட அறிக்கையை திறம்பட நடைமுறைபடுத்திய மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிச்செழியன், முருகன், நாகராஜ்பாண்டியன், முருகன், தலைமை காவலர்கள் பேச்சிமுத்து, கோதண்டராமன், முதல் நிலை காவலர் முத்துகுமார், ஆயுதப்படை காவலர்கள் அருண்குமார் மற்றும் சிவசெல்வமணி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,



ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலி பகுதியில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்னிட்டு சுடுகாட்டு பிக்கெட்டிங்கில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பணிபுரிந்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், ஆத்தூர் காவல் நிலை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ், ஓட்டப்பிடராம் காவல் நிலைய காவலர்கள் பூமிநாதன், அருண்குமார், ராஜபாண்டியன், பசுவந்தனை காவல் நிலைய காவலர் இம்மானுவேல் மற்றும் புளியம்பட்டி காவல் நிலைய காவலர் அருண்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பில் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை 24 மணிநேரத்தில் கைது செய்து வழக்கின் சொத்தான ரூ.2,17,500/- மதிப்பிலான 7¼ பவுன் தங்க தாலி செயின் கைப்பற்றிய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், முதல் நிலை காவலர் மாணிக்கராஜ் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற வீரசக்கதேவி ஆலய 66வது உற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலுலவலுக்கு வந்த காவல் அதிகரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சிறந்த முறையில் உணவு தயாரித்து வழங்கிய ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வார் சந்திரசேகர், காவலர்கள் செல்வமணி, விசு, சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வங்கியின் வெளியே கீழே விழுந்து கிடந்த ரூ.50ஆயிரம் பணத்தை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வார் செல்வராஜ் மற்றும் முதல் நிலை காவலர் முத்தமிழ் ராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




தூத்தக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சந்தேக மரண வழக்கை விசாரணை மேற்கொண்டு கொலை வழக்காக மாற்றி சம்மந்தப்பட்ட எதிரியை உடனடியாக கைது செய்த வடபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராஜாமணி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாஞ்சாலக்குறிச்சியில் நடைபெற்ற வீரசக்கதேவி ஆலய உற்வச திருவிழாவை முன்னிட்டு சிறந்த முறையில் தனிப்பிரிவு அலுவல் புரிந்த மணியாச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,




தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மிகவும் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையான ஸ்டெர்லைட் கலவரத்தின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2022 மற்றும் 23.05.2022 ஆகிய நாட்களில் திட்ட அறிக்கையை திறம்பட தாயாரித்தும், முக்கிய தகவல்களை சேகரித்த மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தங்கராஜ், மயிலேறி முருகன், தலைமை காவலர்கள் சுப்பிரமணியன், பாலமுருகன், சுரேஷ், மகாராஜா, ஜோஸ் ஜூடு லியோ, துரைப்பாண்டி, முதல் நிலை காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் முத்து ஜெபசீலன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,



கடந்த 08.05.2022 அன்று மீன்லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் எப்.சி.ஐ குடோன் அருகே விபத்தில் சிக்கி கவிழ்ந்து மீன்கள் சாலையில் சிதறி கிடந்துள்ளது. அந்த சமயம் அங்கு வந்த முத்தையாபுரம் நெடுஞ்சாலை வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு மீன்களை சாலையில் இருந்து அகற்றி இரவில் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்த்த தென்பாகம் போக்குவரத்து பிரிவு காவலர் ஸ்டாலின் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தை பார்வையிட்டபோது நிலைய பதிவேடுகளை திறம்பட பராமரித்து வைத்திருந்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் கோயில்பிள்ளை என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020ம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சிவ ழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.4ஆயிரம் அபராதமும் கிடைக்க உறுதுணையாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சிவக்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்மந்தபட்ட எதிரிக்கு 8 மாதம் சிறை தண்டனை விரைவாக பெற்று தந்த குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் தங்கபாண்டியன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 எதிரிகளில் முக்கிய எதிரிக்கு 2 வருட சிறை காவல் தண்டனையும் ரூ.3ஆயிரம் அபராமும் மற்ற 4 எதிரிகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.1ஆயிரம் அபராதமும் நீதிமன்ற மூலம் தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் சிவபாலன் என்பவரின்; மெச்சதகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய காவல் ஆய்வாளருக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய காவலர் சேதுராமலிங்கம் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post