தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுற்றுச்சூழல் தின விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில்,
மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், , சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழலை சிறப்பாக பேணும் தனியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட அளவில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்க வேண்டும் என அறிவித்து இருந்தார்கள்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பேணிய தனியர் முத்துக்குமாருக்கும், வி கேன் டிரஸ்ட் தன்னார்வலருக்கும், ஆல்கேன் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கும் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினையும், பாராட்டுக்கேடயத்தையும்
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலையில் வழங்கினர்.
விழாவில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குநர்கள் முகைதீன் கஜேந்திரபாண்டியன் வேளாண்மை கல்லூரி முதல்வர் தேரடிமணி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி தோட்டக்கலை தலைவர் ஆறுமுகம்,
மண்ணியல் துறை தலைவர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) நாகராஜன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர் உமரிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.