ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தமிழக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி


ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதினால் இந்த பகுதியிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, சமையல் மஞ்சள், தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை  அதிக அளவில் கடத்தப்பட்டு வருவது  அதிகரித்துள்ளது. 

இந்தநிலையில் தமிழக கடலோர காவல் குழும போலீசார், கியூபிரிவு போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும்  கடத்தல்காரர்கள்  தங்களது கடத்தல் தொழிலை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக  ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது

மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் அங்கு வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு வருவதும் அதிகரித்து வருகின்றது

இந்தநிலையில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவரின் உத்தரவின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் கடல் பகுதியில் இருந்து உச்சிப்புளி வரை கடல் பகுதியில் படகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சந்தேகப்படியான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post Next Post