மின்மோட்டார் வாங்க மானியம்: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக பழைய மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (மூன்று ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டும், 

புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கும் தமிழக அரசு அறிவித்தபடி 2021-22ம் நிதியாண்டில் "மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்” திட்டத்தின் கீழ் அரசாணை வரப்பெற்று வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்த மொத்தம் 38 எண்களுக்கு ரூ.10,000/- வீதம் ரூ.3.80 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

இதில், ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்புசெட்டு அல்லது மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள், புதிய ஆழ்துளைக் கிணறு/ திறந்த வெளி கிணறு/ குழாய் கிணறு அமைத்து 10 குதிரைத் திறன் வரை புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள் பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், 

சிறு-குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தலைமைப் பொறியாளர், 

சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/- இதில் எது குறைவோ பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122 A1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி (கைபேசி எண்: 9655708447) அலுவலகத்தையும், உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 27H, எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், 

கோவில்பட்டி (கைபேசி எண்: 9443276371) அலுவலகத்தையும், உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10C முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் (கைபேசி எண்: 9443688032) அலுவலகத்தையும, மாவட்ட அளவில் செயற் பொறியாளர். வேளாண்மைப் பொறியியல் துறை, தூத்துக்குடி (கைபேசி எண்: 9443172665) அலுவலகத்தையும் அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post