காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 920 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைக்கான துணை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.
"இதுவரை எங்களிடம் உள்ள தகவலில், குறைந்தது 920 பேர் மரணம் அடைந்துள்ளனர் மற்றும் 600 பேர் காயமடைந்துள்ளனர்" என்று ஷராபுதீன் முஸ்லிம் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.