சென்னை: வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!

சென்னை: வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம். ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரூ.8 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.190 கோடி சொத்துகள் மற்றும் ரூ.7.69 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post