தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள தனியார் இரசாயன கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு, சிட்டகாங்கில் உள்ள சிதகுண்டா உபாசிலாவில் உள்ள கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கன்டெய்னர் டிப்போவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுவரை 43 சடலங்கள் பிணவறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மூத்த அரசு அதிகாரியான சிதகுந்தா ஷஹாதத் ஹொசைன் கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். ரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் 350 பேர் சிட்டகாங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.