சென்னை வந்த துபாய் விமானத்தின் கழிவறையில் இருந்து 4.21 கோடி மதிப்புள்ள 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.!

துபாயிலிருந்து 02.06.2022 அதிகாலை சென்னை வந்த இண்டிகோ விமானம் எண்.6E 66 -ல் கழிவறையில் மறைத்து வைத்து தங்கம் கடத்துவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டனர்.

சோதனையில் 9.02 கிலோ எடை, 4.21 கோடி மதிப்புள்ள 24 கேரட் தூய்மையான தங்கத்தை சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post