குலசேகர நல்லூரில் 30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் - அடிக்கல் நாட்டினார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரநல்லூர் உள்ள பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது 


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


இந்த புதிய சமூதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட  குலசேகரநல்லூர் கனிமொழி எம்பி  தத்தெடுத்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம்  ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post