தேனி மாவட்டம், முல்லை பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன் மகாராஜன்,சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தண்ணீரை திறந்து வைத்து, தெரிவித்ததாவது,
தமிழக அரசின் உத்தரவின்படி, முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 200 கனஅடி வினாடி வீதமும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி வினாடி வீதமும் என மொத்தம் 300 கனஅடி வினாடி வீதம் 120 நாட்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிகழ்ச்சியில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி கௌசல்யா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் மதுரை நீர்வளத்துறை பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.சுகுமார் , கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர்
ரா.சிவபாலன்.