கோவில்பட்டி அருகே பைக் மீது மினிலாரி மோதல் - 2 பேர் பலி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை(50). மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலையில் சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த தனது நண்பர் அண்ணாத்துரையின் மனைவி சுந்தரேஷ்வரியை அவரது ஊரில் விடுவதற்காக தனது பைக்கில் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

 வேலாயுதபுரம் - இலுப்பையூரணிக்கு இடையே சாத்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டு இருந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடதில் அண்ணாத்துரை, சுந்தரேஷ்வரி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரி டிரைவர் மோகனிடம் விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post