மே மாதத்தில் இந்திய ஏற்றுமதி 20.55% அதிகரித்து 38.94 பில்லியன் டாலராக உயர்வு.! - வர்த்தகப் பற்றாக்குறை 24.29 பில்லியன் டாலராக உயர்வு.!

 

மே மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 20.55 சதவீதம் அதிகரித்து $38.94 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் , அதே நேரத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 24.29 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அரசாங்கத் தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

மே 2022 இல் இறக்குமதி 62.83 சதவீதம் அதிகரித்து 63.22 பில்லியன் டாலராக இருந்தது என்று தரவுகள் காட்டுகிறது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 6.53 பில்லியன் டாலராக இருந்தது.

ஏப்ரல்-மே 2022-23ல் ஒட்டுமொத்த ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்து 78.72 பில்லியன் டாலராக இருந்தது.

ஏப்ரல்-மே 2022-23 இல் இறக்குமதி 45.42 சதவீதம் அதிகரித்து 123.41 பில்லியன் டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை $21.82 பில்லியனுக்கு எதிராக $44.69 பில்லியனாக அதிகரித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post