தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
மேற்படி எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி ஆகிய 6 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து தேர்வு எழுதும் மையங்களுக்கு இன்று தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு, சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி தேர்வு மையத்தில் முதன்மை எழுத்து தேர்வுக்கு விண்ணபித்த 1723 விண்ணப்பதாரர்களில் 1464 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 259 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
காமராஜ் கல்லூரியில் 1000 விண்ணப்பதாரர்களில் 847 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 153 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
காரட்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1000 விண்ணப்பதாரர்களில் 829 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 171 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 1300 விண்ணப்பதாரர்களில் 1103 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 197 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 577 விண்ணப்பதாரர்களில் 491 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 86 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் 800 விண்ணப்பதாரர்களில் 677 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 123 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வில் 6400 விண்ணப்பதாரர்களில் 5411 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 989 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.