உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 168090 மரங்கள் நடப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் மூலம் 1 இலட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு 168090 மரங்கள் இன்று நடப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை 101865, வருவாய்த்துறை (அனைத்து அலுவலகங்கள்) 2975, தூத்துக்குடி மாநகராட்சி 4500, பேரூராட்சிகள் 5400, நகராட்சிகள் 750, காவல்துறை 3000, 

சுகாதாரத்துறை 500, கனிமவளத்துறை (குவாரிகள்) 30000, கூட்டுறவுத்துறை 1000, பள்ளிக்கல்வித்துறை 12000, அனைத்துக் கல்லூரிகள் 4000, பொதுப்பணித்துறை 2000, மருத்துவக்கல்லூரி 100 என மொத்தம் 168090 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று நடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,  

தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post