தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மேம்பால பணி -10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தம் என ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மீளவிட்டான் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் புதூர் பாண்டியாபுரம் முதல் இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா வரை உள்ள சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் அந்த வழியாக வரும் லாரிகள், வாகனங்கள், பொதுமக்கள் அனைவரும் மாற்று சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post