சுமார் 10 ஆயிரம் நபர்களை வேலையை விட்டு தூக்க எலான் மஸ்க் முடிவு.!

டெஸ்லா தனது பணியாளர்களில் 10% குறைக்கப் போகிறது என எலான் மஸ்க்கின் இ மெயிலை ஆதாரமாக காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது நிர்வாகிகளுக்கு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார், அதில்  "உலகளவில் பணியமர்த்துவதை நிறுத்துங்கள்", பொருளாதாரம் பற்றி தனக்கு "மிக மோசமான உணர்வு" இருப்பதாகவும், எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரில் 10% வேலைகளை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து எந்த குறிப்பிட்ட காலக்கெடுவையும் கொடுக்கவில்லை. டெஸ்லாவில் வேலை குறைப்புக்குக் காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் நிலைதான் என்று அவர் கூறினார், மதிப்பீடுகளின்படி, மஸ்க் ஆட்களை குறைக்க முடிவு செய்தால், சுமார் 10,000 டெஸ்லா தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என தெரிகிறது. 

வியாழன் அன்று அனுப்பப்பட்ட செய்தியில், சமீபத்திய வாரங்களில் மந்தநிலையின் அபாயத்தைப் பற்றி மஸ்க் கூறிய கருத்துக்களை மற்ற வணிகத் தலைவர்களான ஜேபி மோர்கனின் ஜெய்ம் டிமோன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் தலைவர் ஜான் வால்ட்ரான் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post