முறையான பயிற்சி பெறாத விமானி மற்றும் துணை விமானியை (first officer) இந்தூர் விமான நிலையத்தில் பயணிகளுடன் விமானத்தை தரையிறக்க அனுமதித்ததற்காக விஸ்தாராவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி (first officer) சிமுலேட்டரில் தேவையான பயிற்சி பெறாமல், விமானத்தை சமீபத்தில் இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கினார். "இது விமானத்தில் இருந்த பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு கடுமையான விதி மீறலாகும்" என்று ஒரு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஒரு (first officer) பயணிகளுடன் விமானத்தை தரையிறக்குவதற்கு முன், சிமுலேட்டரில் விமானத்தை தரையிறக்க முதலில் பயிற்சி பெற வேண்டும். எனவே, தேவையான பயிற்சியை மேற்கொள்ளாமல் முதல் அதிகாரிக்கு தரையிறங்கும் அனுமதி வழங்கியதற்காக விஸ்தாராவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.