பிரபல திரைப்படமான KGF 2 வில் முக்கிய கதாபாத்திரமான "ராக்கி பாய்" மூலம் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒரு முழு பாக்கெட் சிகரெட் குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகரில் வசிக்கும் சிறுவன், படம் வெளியான இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து, கதாநாயகன் 'ராக்கி பாயின்' "ஸ்டைலில்" ஈர்க்கப்பட்டு, முதல் முறையாக புகைபிடித்து அவரைப் போல ஹீரோவாக விரும்பினார். இதனால் அவரைப் போலவே சிகரெட் குடித்ததில் அவருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், கடுமையான இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சனிக்கிழமையன்று, செஞ்சுரி மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் ரோஹித் ரெட்டி, முழு சிகரெட் பாக்கெட்டை குடித்ததால் சிறுவன் நோய்வாய்ப்பட்டதாகக் கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"ராக்கி பாய்' போன்ற கதாபாத்திரங்களால் டீனேஜ் வயதினர் எளிதில் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், இந்த சிறுவன் ஒரு பாக்கெட்டை சிகரெட்டை குடித்தது கடுமையான பாதிப்லை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் சிகரெட் குடிக்கும் திரைப்படங்கள் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகும். சிகரெட் பிடிப்பது, புகையிலை மெல்லுவது அல்லது மது அருந்துவது போன்ற செயல்களை கவர்ச்சியாக்காமல் இருப்பதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது" என்று டாக்டர் ரெட்டி கூறினார்.
'ராக்கி பாய்' போன்ற கதாபாத்திரங்கள் ஒரு கடவுளை போல வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பதாகவும், திரையில் இந்த நாயகர்களின் செயல்களால் இளம் மனம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
"இளம் பருவத்தினரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், என்ன காரணிகள் தங்கள் குழந்தையின் செயல்களை பாதிக்கின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டும். பின்னர் வருந்துவதற்குப் பதிலாக, புகையிலை புகைத்தல், மது அருந்துதல் போன்ற செயல்களின் தீய விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது,
இதற்காக குழந்தைகளை அடிப்பது இந்தச் செயலைப் போலவே, எப்போதும் சிறந்த பலனைத் தராது" என்று ரெட்டி மேலும் கூறினார்.